தமிழ் கவிஞர்கள்
>>
நாஞ்சில் நாடன்
>>
முள்மரம் - 2
முள்மரம் - 2
காணாவிடின் காதல் மொழியாவிடின்
இருப்பு அதனை உணராவிடின்
என்ன போம்?
வெயில் காயும் காற்று அலைக்கும்
மழை பொழியும் மண் குளிரும்
எரிக்கும் அனல் உயரும்
புறக்கணிப்பின்
உவர் நீர் உண்டு
வேர் பரப்பிக் கொடிவீசி
முட்செடி வளரும்
வாழ அவாவுதல்
இளமக்களின் மணநாள்
கம்பூன்றி எனினும்
காண விழைதல்
காலன் கைக் கணக்கு
பயன் ஒன்றிலாத பிறப்பொன்றில்லை
பயன் என்றுரைப்பது எவர்தலை மாட்டு?
வேலிக்கு ஆகும் விறகுக்கு ஆகும்
படையொடுங்கு பாம்பின்
உறைவிடம் ஆகும்
இளையதாக முள்மரம் கொல்வதும்
முதியதான மோகமுள் பறிப்பதும்
முயன்று பார் தோற்றுப் போவாய்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
