நோன்பு

மலர்ந்தனன் மீதேறி மதுவுண்டு
உயிர்ப்புக்கு உதவும் ஒன்று
மகரந்தத் தேன்சேர்த்து வஞ்சமிகு
மாந்தர்க்கு வழங்கும் ஒன்று.

தன்னூன் பெருக்கற்கு உதிரம் குடித்துக்
குடும்பம் பெருக்கும் மற்றொன்று
குருதியும் உறிஞ்சி நோக்கமே அற்று
நோயும் பரப்பும் வேறொன்று
ஆறறிவுடைய
அகிலமும் வென்ற
ஆனந்தப் பெருவெளி
அடைய முயன்றவர்
நோயை வளர்த்து நோய்தனைப் பரப்பி
நோய்க்கு இரையாக
நோன்பும் இருந்தார்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:59 pm)
பார்வை : 0


மேலே