தப்புத் தண்டா தப்புத்

தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா

வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா



மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்

புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா



உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

உய் உய் உய் உய் உய் உய் உய் உய்



தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவி நான் செய்யவா

வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா



களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை

என்னிடம் திருப்பிக் கொடு

என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்

ஒத்தடம் தந்து விடு



ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி தந்து விடு

ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும் வன்முறை முத்தம் கொடு

பெ: இடியோ மழையோ அது அறையில் இருக்கட்டுமே

இரவோ பகலோ அது வெளியில் இருக்கட்டுமே

ஆ: நடந்து வரும் சித்திரமே நனைய விடும் சொப்பனமே

சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே

யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்



குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

உய் உய் உய் உய் உய் உய் உய் உய்



தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா

வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும் சூரியன் புதியதடி

தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும் சுகவகை புதியதடி



இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று சாயுது இளையகொடி

இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று ஏங்குது பழையபடி



ஆடை சரிந்தால் உன் அவசியம் பார்த்து வைப்பேன்

ஜாடை புரிந்தால் உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்



மார்பழகு இந்திரனே மஞ்சள் நிற மன்னவனே

உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே

ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்



உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

உய் உய் உய் உய் உய் உய் உய் உய்



தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா

வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்

புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 12:41 pm)
பார்வை : 0


மேலே