உறவு

ஈரக் கைகளைப் புடவையில் துடைத்தவா
றெதிர் வீட்டம்மாள் எட்டிப் பார்த்தாள்
அம்மா தபால்.
அஞ்சலட்டையை நொடியில் படித்ததும்
எரவாணத்தில் செருகிப் போனாள்
எரவாணத்தில் செருகிய கடிதம்
வருத்தப்பட்டு மூக்குக் கறுத்ததே.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 2:22 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே