அடியே கடல்
மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறனே
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
மீனத் தூக்கி றெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ?
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
உன் கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்துப் போறாயே நீ
சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?