முட்டாளாய் முட்டாளாய் என்னமோ ஏதோ

முட்டாளாய் முட்டாளாய்
ஏன் மாறினேன்?
என் நெஞ்சை பந்தாக்கி
ஏன் வீசினேன்?

வானெங்கும் புல் மேகம்
ஏன் மேய்கிறேன்?
மாற்றங்கள் ஏனென்று
ஆராய்கிறேன்!

சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
காரணம் நீயில்லை!

ஆயிரம் பெண்களைக் கடந்திருப்பேன்
ஆறோ ஏழோ காதல் அதில்
அப்போதெல்லாம் மாறா உலகம்
இன்றெப்படி மாறியது?

சுவரை காகிதம் ஆக்குகிறேன் - என்
மூக்கை பேனா ஆக்குகிறேன்
மையில் எந்தன் மூக்கை விட்டு
உன் பெயரை தீட்டுகிறேன்!

விரலைக் கொண்டு சுவாசிக்கிறேன்
தலைகீழாக யோசிக்கிறேன்
காதில் உன்னை ஊட்டுகிறேன்!

சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீயில்லை!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:03 pm)
பார்வை : 0


மேலே