அந்த மொட்டை மாடியின் வெளிச்சம்

அந்த
மொட்டை மாடியின்
வெளிச்சம்
குறைந்த இரவின்
தனிமையில்
நம்மை
அருகருகே
படுக்க வைத்துவிட்டு
நாம்
பேசிக்கொண்டே
போய்வந்த
பாதைகளைத் தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து
பார்க்கின்றன


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 3:57 pm)
பார்வை : 25


மேலே