இரண்டு இரவுகள்

இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக் காற்றுகளால் நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத்
தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து, தூங்கி,
சாப்பிட்டு, படித்துப்
பேசாமலேயே
இறங்கிப் போக பெண்ணே
உனக்குக் கற்றுக்
கொடுத்தது
யார்


  • கவிஞர் : அறிவுமதி
  • நாள் : 9-Mar-12, 3:57 pm
  • பார்வை : 25

பிரபல கவிஞர்கள்

மேலே