மழையில்

மழையில் நனைந்த கந்தல்த் துணி மீது
பாத சாரியின் செருப்புக் கால்
ஊன்றி அகன்றது.
கந்தல்த் துணியின் தண்ணீர்
பிழியப்பட்டு ஊர்ந்ததைக் கண்டேன்
நெஞ்சம் நெகிழ்ந்தது.
உவமை ஒன்று துன்புற்ற தென்று.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:36 pm)
பார்வை : 0


மேலே