கவிக்குரல்

கல்லாத நபியே! நீங்கள்
கற்றதெல்லாம்
அல்லாஹ் என்னும்
ஆசானிடத்திலோ?

பள்ளிக்கூடத்தையே
பார்க்காத நீங்கள்
பள்ளிகளைக்
கட்டிக் கொடுத்தீர்களே.....
படைத்தவனை ஐவேளை
படிப்பதற்காகவோ?

அறிய அறியத்தான்
அறியாமை தெரியுமோ?
அதற்காகத்தான்
கல்வியை எங்கள்
கடமையாக்கினீர்களோ?

‘எழுதப் படிக்கத்
தெரியாதவர்களுக்குக்
கற்றுக் கொடுத்தால்
கைதிக்கு விடுதலை’
என்றீர்களே.....
நீங்கள்தான்
எழுத்தறிவு இயக்கத்தின்
வேரோ?
அறிவொளி இயக்கத்தின்
ஆணிவேரோ?

உம்மி நபியாய்
உலகிற்கு வந்தவரே!
பாரெல்லாம் நடைப்பெறும்
உங்கள்
பல்கலைக் கழகத்தில்
பாடங்கள் ஐந்தோ?
‘கலிமா’ ‘தொழுகை’
‘நோன்பு’ ‘ஜக்காத்’
‘ஹஜ்’ என்னும்
பாடங்கள் ஐந்தோ?


கவிஞர் : மு. மேத்தா(11-Apr-11, 9:03 pm)
பார்வை : 138


பிரபல கவிஞர்கள்

மேலே