அகிலாண்டேஷ்வரிக்கு நன்றி

ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்
மோனைக்கா பஞ்சமுண்டு?
முற்றெதுகை முதலான
சேனைக்கா பஞ்சமுண்டு?
சூழ்கொண்ட செந்தமிழின்
சோனைக்கா பஞ்சமுண்டு?
சுடர்கவிதை துளிர்க்காதோ?


கவிஞர் : கவிஞர் வாலி(4-Jan-12, 10:16 am)
பார்வை : 81


பிரபல கவிஞர்கள்

மேலே