தமிழன்னைக்கு நன்றி

கொடிவருடிப் பூந்தென்றல்
குலவுகின்ற தென்பொதிகை
மடிவருடிப் பூத்தவளே!
மணித்தமிழே! மாற்றாரின்
அடிதிருடிப் பாடாமல்
அம்மா!நின் அரவிந்த
அடிவருடிப்பாட என்னை
ஆளாக்கி வைத்தனையே!


கவிஞர் : கவிஞர் வாலி(4-Jan-12, 10:18 am)
பார்வை : 94


மேலே