தென்றலுக்கு நன்றி

கமுகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ?


கவிஞர் : பாரதிதாசன்(14-Jan-11, 1:38 pm)
பார்வை : 602


பிரபல கவிஞர்கள்

மேலே