படைத் தமிழ்

இருளினை, வறுமை நோயை
இடருவேன்; என்னுடல் மேல்
உருள்கின்ற பகைக்குன்றை
நான் ஒருவனே உதிர்ப்பேன்;
நீயோ கருமான்செய் படையின் வீடு;
நான் அங்கோர் மறவன்! கண்ணற்
பொருள்தரும் தமிழே!
நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!


கவிஞர் : பாரதிதாசன்(14-Jan-11, 1:41 pm)
பார்வை : 799


பிரபல கவிஞர்கள்

மேலே