நாதமெனும் கோவிலிலே

நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்.....
நாதமெனும் கோவிலிலே ........

இசையும் எனக்கிசையும் தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்

விலையே எனக்கிலையே தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்

இறைவன் என ஒருவன் எனது
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 3:43 pm)
பார்வை : 238


பிரபல கவிஞர்கள்

மேலே