பிரிவு தீது

கேரளம் என்றுபி ரிப்பதுவும் - நாம்
கேடுற, ஆந்திரம் பிய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.

கேரளம் என்னல்தி ராவிடமே - ஒரு
கேடற்ற ஆந்திரம் அவ்வாறே
கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள்
திராவிடம் ஆகும் அண்ணே - வேறு
இராதெனல் உண்மை அண்ணே.

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னடம் என்றதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர்நா டாமோ? - அவை
வடவர்நா டாமோ?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல்லாமோ - அவர்
வேர்வந்தசொல் லாமோ?


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:38 pm)
பார்வை : 18


பிரபல கவிஞர்கள்

மேலே