புதுக்கவிதை!

புதுக்கவிதையை
எல்லோருக்கும் எழுதக் கற்றுக்கொடுத்த ஆசானே!
உன்னுடைய புதுக்கவிதை நூல்களைப்
புரட்டிய பின்னர் தானே
என்னுடைய பொழுதுகளுக்கும் அர்த்தங்களே புருந்தன!
நீ
'கண்ணீர் பூக்களை' மட்டும் தந்துவிட்டுக்
காணாமல் போனதாக
இன்றும் சிலர் சொல்கிறார்களே...
இதோ,
உனது கவிதா வாசலுக்குள் நான் நுழைகிறேன்.
மரபுக் கவிதையில் நீ சிறகு விரித்துப் பறந்த
மனச்சிறகையும்
'முகத்துக்கு முகம்' பார்த்துக் சொன்ன
கவிதை வரிகளையும்
கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன்.
அவையெல்லாம்
நம் கண்முன் 'நடந்த நாடகங்கள்' தானே!


கவிஞர் : மு. மேத்தா(29-Feb-12, 5:53 pm)
பார்வை : 77


மேலே