இதயத்திற்கு நினைவாஞ்சலி

துடி துடிக்கும்
இதயங்களோடு நீங்கள்
கூடியிருப்பது
நின்று விட்ட
அந்த இதயத்திற்கு
நினைவாஞ்சலி செலுத்தவோ?

வீதியெலாம்
வெடி வெடித்து
வருடந்தோறும் – தன்
வருகையைத்
தெரிவித்துக் கொள்கிற
தீபாவளி

இந்த வருடந்தான்
எங்கள்
இதயத்தில் வெடிவெடித்துத்
தன் வருகையை
எடுத்துரைத்தது!


கவிஞர் : மு. மேத்தா(21-Apr-12, 12:56 pm)
பார்வை : 39


மேலே