தோத்திரப் பாடல்கள் பூலோக குமாரி

பல்லவி

பூலோக குமாரி ஹே அம்ருத நாரி

அனுபல்லவி

ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலசகுச பாரே
கால பயகுடாரி காமவாரி கனக லதா ரூப கர்வதிமிராரே.

சரணங்கள்

பாலே ரஸ ஜாலே
பகவதி ப்ரஸீத காலே
நீல ரத்னமய நேத்ர விசாலே
நித்ய யுவதி பத நீரஜமாலே-
லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ
நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸீந்தரி நித்யகல்யாணி
நிஜம்மாம் குருஹே மன்மத ராணி.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:54 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே