ஆசையில் ஓர் கடிதம்

ஆசையில் ஒரு கடிதம்

வரைந்ததே ஓர் இதயம்

எழுதினால் தலையெழுத்தை

மாற்றியே விதி எழுதும்



ஒரு மேகம் தூது அனுப்ப

அது இடியை அங்கு இறக்க



இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை

விதி வட்டம் தாண்டி வர வழியில்லை

விதி வட்டம் தாண்டி வர வழியில்லை

வழியில்லை

(ஆசையில்..)



குளத்துக்குள்ளே ஒரு கல்லெறிந்தேன்

அலை அடிக்கும் என்று காத்திருந்தேன்

குளக்கரையே உடைய கண்டேன்

விதியே இது தகுமா?

பூங்கொடியில் ஒரு பூவை கண்டேன்

பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்

கொலை செய்ததாய் கொடி புலம்புவதோ

சரியோ இது சரியோ

தவறுகள் மூட்டிய நெருப்பினிலே

தாலியின் மஞ்சள் கருகுவதோ



இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை

விதி வட்டம் தாண்டி வர வழியில்லை

விதி வட்டம் தாண்டி வர வழியில்லை

வழியில்லை

(ஆசையில்..)



நதி வளையும் வழி தெரிவதுண்டு

விதி வளையும் வழி தெரிவதில்லை

தெரிந்துக் கொண்டால் அதில் ருசியுமில்லை

இனிமேல் என்ன கதையோ

பால் குடத்தில் ஒரு எரும்பு விழ

பல்லியென்று அதை வெருப்பதென்ன

பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன

பிழையோ என்ன பிழையோ

கண்ணீர் உன்னை தண்டிக்குமா

காலங்கள் நம்மை மன்னிக்குமா



இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை

விதி வட்டம் தாண்டி வர வழியில்லை

விதி வட்டம் தாண்டி வர வழியில்லை

வழியில்லை

(ஆசையில்..)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 3:14 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே