அச்சம் அச்சம் இல்லை

விடியாத இரவென்று எதுவுமில்லை

முடியாத துயரமென்று எதுவுமில்லை

வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை

வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

ராராரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை

இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு

கண்ணீர் மிச்சமில்லையே

(ஹே அச்சம்)

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு

நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(காலம்)

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட

இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

(பட்டாம்பூச்சி)

வாடி இளையசெல்லிலே.. வாடி இளையசெல்லியே

நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே

அம்மா அழகு கண்ணம்மா… அம்மா அழகு கண்ணம்மா

இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லலா லலல்லல்லோ பட்டாம்பூச்சி

லலா லலல்லல்லோ பட்டாம்பூச்சி

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்

அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்

(வானம்)

பூமி துறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு(2)

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்

பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்

மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்

விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

(இன்பக்காற்று)

கோழிச்சிறகு குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்

ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 3:12 pm)
பார்வை : 0


மேலே