தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
தோத்திரப் பாடல்கள் காளிக்குச் சமர்ப்பணம்
தோத்திரப் பாடல்கள் காளிக்குச் சமர்ப்பணம்
இந்தமெய்யும் கரணமும் பொறியும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்
வந்தனம்அடி பேரருள் அன்னாய்!
வைரவீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்தனை தெளிந்தேனினி யுன்றன்
திருவருட்கென அர்ப்பணஞ் செய்தேன்
வந்திருந்து பலபய னாகும
வகைதெரிந்துகொள் வாழி யடி நீ.