புதிது புதிதாக எழுதச் சொல்கிறார்கள்

புதிது புதிதாக எழுதச்
சொல்கிறார்கள்
உன் பழைய
ஞாபகங்களைத் தான்
கிளற வேண்டும்

ஒரு தைரியசாலி
அச்சம் அடைவது
உன்னைப் போன்ற
கோழையிடம் தான்

நீ அளித்த
அன்பளிப்புகளிலேயே
அற்புதமான
அன்பளிப்பு இந்த
வேதனைதான்

உன் புருவங்கள் என்பது கோடிட்ட இடம் அதை என் கவிதைகளால் நிரப்பட்டுமா

இருட்டுக் கூந்தலை பகலில் காட்டுகிறாய்
நிலா முகத்தை
இரவில் பூட்டுகிறாய்
புரியவில்லை உன்
வானியல்


கவிஞர் : பா.விஜய்(8-Jan-11, 2:38 pm)
பார்வை : 704


மேலே