சத்திர வாசம்

அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம்
திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்டு
மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவி


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 3:05 pm)
பார்வை : 24


பிரபல கவிஞர்கள்

மேலே