தீக்குளியள்

ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும்


  • கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
  • நாள் : 21-Apr-12, 3:05 pm
  • பார்வை : 37

பிரபல கவிஞர்கள்

மேலே