ஒரு மாறுதலுக்காக

ஒரு மாறுதலுக்காக -
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்
தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்
மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்
உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையணை
முளைக்கட்டும்
அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டிநாய் தூங்கட்டும்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:20 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே