மெசியாவின் காயங்கள் - மனசு

ஒளிரும் சமுத்திரச்சிற்பம் நீ
உன்மீது கவியும்
எண்ணங்களெல்லாம்
சுவாசக் காற்றின்
இரக்கமற்ற புறக்கணிப்பில்
பறக்கும் கானல் தோணிகள்

பளிங்குவெளி மீது
பதி வைத்துப் பாயும் விழிக்கதிரோ
பச்சை உமிழும்
பசும் புதிரின் வாசலில்
குழையும் நாய் வால்.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:19 am)
பார்வை : 88


பிரபல கவிஞர்கள்

மேலே