உறங்காத இரவுகள்!

நீ உறங்கா இரவுகளில்
உன்னை என் தோள்சாய்த்து
உனக்கு படித்துக் காட்டவே,

உன் நினைவுகளால்
நீண்ட என் இரவுகளில்
எழுதிவைக்கின்றேன்,

ஒவ்வொரு நட்சத்திரத்திலும்
உனக்கான என் கதைகளை..!

கனவுகளில் உன்னோடு
பேசியவைகளையே
கவிதைகளாக்கி வைத்திருக்கிறேன்
நான் உறங்கிய இரவுகளில்..!

இப்பொழுது புரிகிறதா,
எண்ணிக்கையில்
என் கவிதைகளைவிட‌
நட்சத்திரங்கள்
அதிகமாய் இருப்பதன் காரணம்..?


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 3:12 pm)
பார்வை : 0


மேலே