தமிழின தலைவர் கருணாநிதிக்கு வணக்கம்

தமிழ் வணக்கம், தமிழின தலைவர் வணக்கம்.எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்.
வைப்பேன் என் தலைவனுக்கு மட்டும் ஒரு வணக்கம்.

எவரேனும் எண்ணுவரோ தலைவன் வேறாக, தமிழ் வேறாக.
தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே உன் வருகை,
கண்டதும் தூக்குவேன் என் இருகை.உயரிய தலைவா உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு
வாயை திறந்தால் தான் என் வாய்க்கும் கவிதை வாய்க்கும்.

என் பாட்டுக்கு நீதான் பிள்ளையார் சுழி.உன்னை முன் வைக்காமல் என்ன எழுதினாலும்,என் பாட்டு வாங்கும் பெரிய சுழி.அருமை


கவிஞர் : கவிஞர் வாலி(6-Dec-12, 12:48 pm)
பார்வை : 0


மேலே