தேர்தல் கவிதை - கலைஞர்
தலைவா,ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய்.
அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
தேர்தலுக்கு தேர்தல் விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று அயலாரை ஓட்டி,
அஞ்சு (5) முறை அரியணை ஏறிய அஞ்சுக செல்வா.தேர்தல் வரலாற்றில் உன்னை வெகுவாக விமர்சனம்
செய்ய டில்லியில் ஒரு கோபால்சாமி,
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.நீயோ இந்த 2 கோபால்சாமிகளையும்
புறம் தள்ளிய கோபாலபுரத்து சாமி
எனவேதான் கும்மாளமிட்டு உன்னை
கொண்டாடுகிறது இந்தபூமி.அய்யா,
50 ஆண்டு காலம் உன் சேவடிபட்ட சபை
சென்னை சட்டசபை.
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
முதல் முதல் தேர்தல் குளத்தில் குளிக்க நீ தொடங்கிய ஊர்தான் குளித்தலை.குளித்தலைக்கு பிறகு இதுவரை குனியா தலை உன் தலை.
இனியும் குனியாது வெற்றியை குவிக்கும் என்பதும் உன் தலை.
சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய்.
அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.
உன்னை விட்டு வலது போனால் என்ன, இடது போனால் என்ன.
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது நடு நிலைமை.
நடுநிலைமை தான் நல்ல தலைமை.