மெசியாவின் காயங்கள் - அனிச்சை

ஒளியின் விரல்களுக்கிடையே
பின்னிக் குழையும் இருளின் விரல்
விறகாக எரிகிறது

முழு ஆகாயத்தையும்
ஒருகணத்தில்
அளக்க எத்தனிக்கிறது
ஒற்றைச் சிறகு

பறக்கத் துடிக்கிறது பூச்சி
இருக்கத் துடிக்கிறது பல்லி

வெள்ளி நாவின் சுழற்சியில்
மின்னித் தெறிக்கின்றன
மீட்சியின் சொற்கள்


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:04 am)
பார்வை : 47


பிரபல கவிஞர்கள்

மேலே