மெசியாவின் காயங்கள் - வெற்றி

வெட்டு குத்துக்களுடன்
கட்டங்கள் தாண்டி
ரத்தம் சொட்ட
பழுக்க விதிக்கப்பட்டிருக்கிறோம்
தாயத்தில் எல்லோரும்

காய்களாக்கப்பட்ட பின்னும்
உடைந்த வளையலின்
ஒவ்வொரு துண்டிலும்
வளைந்து கிடக்கிறது
வானவில் நினைப்பு

வினாடி முத்துக்களை
கண்டுபிடித்தவன் முகத்திலேயே
விட்டெறிந்து விளையாடுகிறது
காலம்

விழு என்றால்
விழுகிறது
உடையாமல்
தாயம்


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:03 am)
பார்வை : 50


பிரபல கவிஞர்கள்

மேலே