தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (1)
பீடத்தி லேறிக் கொண்டாள் -- மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.
சரணங்கள்
நாடித் தவம் புரிந்து -- பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு -- கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக் -- கூடத்தில் விளையாடி
ஓடத் திரிந்து கன்னி -- வேடத்தில் ரதியைப்போல்
ஈடற்ற கற்பனைகள் -- காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் -- ஊடுற்றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப -- வீடொத் தினிமைசெய்து
வேடத்தில் சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி) 1
கண்ணன் திருமார்பிற் -- கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் -- வீரச் சிங்கா தனத்தே,
நண்ணிச் சிவனுடலை -- நாடுமவ ளென்கோ?
எண்ணத் திதிக்குதடா, இவள்பொன் னுடலமுதம்
பெண்ணி லரசியிவள் -- பெரிய எழிலுடையாள்
கண்ணுள் மணியெனக்குக் -- காத லிரதியிவள்
பண்ணி லினியசுவை -- பரந்த பொழியினாள்
உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி) 2
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)