தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (2)

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரண மெய்தினேன். (நின்னையே)

சரணங்கள்

பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே -- நித்ய கன்னியே, -- கண்ணம்மா! (நின்னையே) 1

மாரனம் புகளென்மீது வாரிவாரி வீச நீ -- கண்
பாராயோ -- வந்து சேராயோ, -- கண்ணம்மா! (நின்னையே) 2

யாவு மே சுகமுனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மேவு மே இங்கு யாவுமே, -- கண்ணம்மா! (நின்னையே) 3


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:34 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே