ஓ அமேரிக்கா…. !

ஓ அமெரிக்க ஏகாதிபத்தியமே… !

ஆரியத்தின் எச்சமே… !

பார்ப்பனீயத்தின் மிச்சமே.. !



தகத்தகாய தங்கக் கதிரவனையா தாக்குகிறாய்… ?

தலித்தென்றால் இளப்பமென்றா ஏசுகிறாய்…. ?



தமிழனில்லா இலங்கையிலே தமிழுக்கு அலங்காரம் ….!

தமிழன் உள்ள அமெரிக்காவில் செம்மொழியை

மறுக்கும் அகங்காரம் !



அமேரிக்காவில் ஓபாமா கறுப்பினத்தின் ராசா… !

தமிழ்நாட்டில் ஆண்டிமுத்து மகன் தலித்தினத்தின் ரோசா…!



ஆரிய இனத்தின் ஆணி வேரை

பிடுங்காமல் விட்டதால் இன்று….

அமெரிக்காவில் கூக்குரலிடுகிறது

ஒரு கிழ நாரை.. !



யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதில்லை என்றான் பாரதி !

தலித்துகளை தங்கத்தேரில் வைத்து ஓட்டும்

ஆண்டிமுத்து மகன் அதன் சாரதி. !



அமெரிக்காவிற்கு பிடித்தது ட்ரிபிள் எக்ஸ் ரம்.. !

ஆ.ராசாவுக்கு பிடித்தது ஸ்பெக்ட்ரம்.. !



நியூயார்க் டைம்ஸ் என்ற நாளேடு… !

அது ஏந்தப் போகிறது திருவோடு…..!



நியூயார்க் டைம்ஸ் படித்தால் வரும் தலைவலி…!

அதற்கு ஒரே நிவாரணி… முரசொலி….!



ஓ அமெரிக்காவே…. !



குடும்ப அரசியல் நடத்தும் கிழவனென்கிறாய் என்னை.. !

குடும்பமே நடத்தத் தெரியாத கயவனென்கிறேன் உன்னை.. !



ஒன்றாகி, இரண்டாகி மூன்றாகியதோ என் குடும்பம்….!

ஒரே ஒரு லெவின்ஸ்கியால் உடைந்ததே உன் பிம்பம்…!



உனக்குத் தெரிந்ததோ ஒரே ஒரு வாட்டர் கேட்…!

பல கோடிகளை விழுங்கி சத்தமில்லாமல் இருப்பது

என் வீட்டு கேட் !



ஈராக்கை அழிக்க நீ பயன்படுத்தியதோ வான்படை… !

இந்தியாவை அழிக்க என்னிடம் இருப்பதோ வானரப்படை.. !



ஈராக்கை அழித்ததால் நீ உலகமகா பாதகன்….!

பல கோடிகளை விழுங்கியபின்னும் நான் தமிழினத்தின் காவலன். !



அமெரிக்க அதிபரின் மனைவி ஃபர்ஸ்ட் லேடி.. !

துட்டு அடிக்கறதுல நான் படா கேடி…!



என் பேரன் எடுத்த படம் பேரு க்வார்ட்டர் கட்டிங்…..!

எனக்கு அவசியமே இல்லாத விஷயம் ஹேர்கட்டிங்….!



அமெரிக்காவின் மீது உலகத்துக்கே வெறுப்பு….!

என் மனங்கவர்ந்த கவர்ச்சிக் கன்னி குஷுப்பு….!



அமெரிக்காவே.. என்னிடம் வேகாது உன் பருப்பு…!

நான் அண்ணா பெரியார் குக்கரில் வேகவைத்த நெருப்பு…!



அடுத்த முறை வராமலா போய் விடுவாய் ஓபாமா… ?

வந்தால் உன் கைக்கு நான் போடுவேன் காப்பம்மா…!

ராசாவை ஏசியதால் வந்தது எனக்கு இழுக்கு…!

இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஓபாமா மீது வழக்கு…!



தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை சவுக்கு…!

மவனே…! அவனுக்கு வசம்மா ஒரு நாள் இருக்கு…!


கவிஞர் : கருணாநிதி(29-Feb-12, 5:01 pm)
பார்வை : 55


பிரபல கவிஞர்கள்

மேலே