ஏலேலோ

ஆசை என்னும் ஏலேலோ - அரும்புவிட்டு அயிலேலோ

கோசம் என்னும் ஏலேலோ - கொழுந்துவிட்டு அயிலேலோ

மோட்சம் என்னும் ஏலோலோ - மொட்டுகட்டி அயிலேலோ

போதம் என்னும் ஏலோலோ - பூப்பூத்து அயிலேலோ

புத்தி என்னும் ஏலேலோ - பிஞ்சுவிட்டு அயிலேலோ

காமம் என்னும் ஏலேலோ - காய்காத்து அயிலேலோ

கருணை என்னும் ஏலேலோ - காவலிட்டு அயிலேலோ

பக்தி என்னும் ஏலேலோ - பழம்பழுத்து அயிலேலோ”


கவிஞர் : ஆவுடை அக்காள்(2-May-14, 12:39 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே