கத்திரிக்காய் என்ன காதலா?

இரவில்
காதல் என்ன கத்திரிக்காயா?
தொடர் கதை எழுதிய
வாணி மணாளன்
பகலில்
காய் கறிக்கடை
சந்தைக்கு சென்று
கத்திரிக்காய் விலை
கிலோ இரண்டென கேட்டு
அதிர்ந்தார் அயர்ந்தார்
கத்திரிக்காய் கடைக்காரன்
கடுப்பில் சொன்னான்
அவ்வளவு மலிவாய்
அள்ளிக்கொண்டு செல்ல
கத்திரிக்காய் என்ன காதலா?


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:25 pm)
பார்வை : 108


பிரபல கவிஞர்கள்

மேலே