காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை

ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக் காட்டியது.

குழந்தை பரவசமாய்
நிலவைப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின்
வாய்க்குள்
உணவை ஊட்டுவது மாதிரி
நான் உன்னைப் பரவசமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கையில்...

காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:46 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே