தோத்திரப் பாடல்கள் சந்திரமதி பாட்டு
பச்சைக் குழந்தையடி -- கண்ணிற்
பாவை யடி சந்திரமதி.
இச்சைக் கினிய மது; -- என்றன்’
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே -- நல்ல
நாகமணி யுள்ள தென்பார்;
துச்சப்படு நெஞ்சிலே-நின்றன்
சோதி வளரு தடீ.
1
பேச்சுக் கிடமேதடி -- நீ
பெண்குலத்தின் வெற்றியடி
ஆச்சர்ய மாயையடி -- என்றன்
ஆசைக் குமரிய
நீச்சு நிலை கடந்த -- வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர் போல்
தீச்சுடரை வென்ற வொளி -- கொண்ட
தேவி நினை விழந்தே னடி. 2
“சந்திரமதி” என்பது காதல் கொண்டவளாகிய பெண்ணைக் குறிப்பது;
சந்திரன்
காதலிக்கு அதி தேவதையாதலால்.
[பாட பேதம்]: வீழ்ந்தேனடி: ‘விரும்பினேன், அடி’ என்ற பொருளில்
‘விழந்தேனடி’
என்று மிருக்கலாம் என்பது கவிமணியின் பாடபேதம்.
நீலக் கடலினிலே -- நின்றன்
நீண்ட குழல் தோன்றுதடி;
கோல மதியினிலே -- நின்றன்
குளிர்ந்த முகங் காணுதடி;
ஞால வெளியினிலே -- நின்றன்
ஞானவொளி வீசுதடி;
கால நடையினிலே -- நின்றன்
காதல் விளங்குதடி. (பச்சைக் குழந்தையடி)
3