இதயத்தை இழந்தால் எதில் வெற்றி?

கிரிக்கெட் ஆட்டம்
பார்க்கவோ? இல்லை
கேமிரா விளையாட்டைப்
பார்க்கவோ?
பார்வைக்குப் பரவசம் -
அதுதான் சார்ஜா!

பந்தைத் தொட்ட கேமிரா
பளிங்கு கன்னத்தைத் தொடும்.
காதணிகளைக்
கொஞ்சி வரும் ஒரு நேரம்!
உதட்டுச் சாயத்தில்
குளித்து வரும் ஒரு நேரம்!

பெண் பிடிக்கும்
வெண்சுருட்டுப் புகையோடு
மோகப் பயணம் ஒரு நேரம்!
ஆட்டக்காரர் பின்னால்
ஓடிக் களைத்த கேமிரா
பிரமதேவனின்
பிரத்தியேகப் படைப்புகளை
ஆராதிக்கத் திரும்பும்
அவ்வப்போது!

வருணனை,
நாக்கின் வறட்சியை
நனைத்துக் கொள்ளத்
தாவும் இடத்தில் வாலிப நதிகள்!

இழுபறிப்
பந்து வீச்சுகள்;
மட்டையடிகள்;
ஓட்டங்களுக்கு நங்கூரம்!
எவன் பார்ப்பான்
இந்த வறட்டிழுப்பை?


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:53 pm)
பார்வை : 18


பிரபல கவிஞர்கள்

மேலே