போராட்டம் எழும்

ஏரோட்டும் ஏழை இதயம் குமுறினால்
போராட்டமே எழுமே! - புவியிலே
போராட்டமே எழுமே!
குடும்பம் குடும்பமாய்ப் பிச்சை எடுத்தலையும்
கொடுமைகளை இனிச்சகியோம் (ஏரோட்)

கூழுக்குப் பலபேர் வாடவும் - சிற்சிலர்
கொள்ளையடித்தலைச் சகியோம்
காடு மேடுகளைச் சீர்த்திருத்தி - நல்ல
கழனிகள் ஆக்கியது யாரு?
கண்ணீரிலே பயிர் வளர்த்தே - அதை
நாட்டுக்கு ஈந்ததுயாரு?
வயிறு புடைக்கத்தின்னு மாடியிலே உறங்கும்
மனிதர்களே இதைக் கேளீர்! (ஏரோட்)


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 4:01 pm)
பார்வை : 122


பிரபல கவிஞர்கள்

மேலே