தமிழ் கவிஞர்கள்
>>
வாணிதாசன்
>>
தோழி
தோழி
கட்டி வைத்த மணல் வீட்டை
கலைத்துவிட்ட சிறுவயதில்
என்னை நீ புரிந்துகொண்டாய்!
கட்டுக்கடங்காத காளை வயதினில்
கட்டிவைத்த பூனை போல் இருந்தபோதும்
என்னை நீ புரிந்துகொண்டாய்!
கண்ணியமான என் நட்பை
காதலென்று பிறர் கட்டிவிட்ட
கட்டுக்கதையை நீ எப்படி நம்பினாய்?
கட்டை மேல் கட்டை வைத்து - என்
கட்டை வெந்தால் தான்
என்னை நீ புரிந்துகொள்வாய் என்றால்
காலம் காலமாய் கண்ணீர் விடுவதைவிட
காற்றினில் கரைந்து போக சம்மதமே.
அதற்கு முன் ஒரு வார்த்தை சொல்,
எப்போது என்னை நீ -- இல்லையில்லை
என் நட்பை நீ புரிந்துகொள்வாய் என்று??