ஓ வெண்ணிலா

ஓ வெண்ணிலா

காதல் ஓர் மின்னலா

பூமீதிலே தூங்கும் பூந்தென்றலா

(ஓ வெண்ணிலா..)தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா

போராடிடும் வாழ்க்கைதான் காதலா

காலங்கள் தோறும் வாலிபம் செய்யும்

தவங்கள்தான் காதலா

(ஓ வெண்ணிலா..)சிலுவை தந்த போதும்

சிறகை போல நினைக்கும்

மேகம் போல மிதக்கும்

காதலே காதலே

காதல் ரோஜா

முள்ளாய் மாறும்

சூடும் கூட மறந்தாய்

சூரியன் கூட நினைப்பதென்ன

காதல் பேசினாய்

(ஓ வெண்ணிலா..)உன் காதல் உள்ளம்

தாஜ் மஹாலில் வண்ணம்

என் நெஞ்சை நீதான்

திறந்தாய் திறந்தாய்

காதல் நெஞ்சை

ஏனோ மறைத்தாய்

உன்னில் நீயே ஒளிந்தாய்

ஜன்னலை மட்டும் திறந்துவைத்து

வாசலை ஏன் அடைத்தாய்

(ஓ வெண்ணிலா..)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:19 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே