ஒரு பண்பாடு இல்லையென்றால்

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை

நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை

சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்

என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்

(ஒரு பண்பாடு..)



வளர்ந்து வராத பிறை இல்லை

வடிந்து விடாத நுரை இல்லை

திரும்பி வராத பகல் இல்லை

திருந்திவிடாத மனம் இல்லை

ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்

ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்

உயிரை சுவைக்கும் பொய் இல்லை

இதை இன்பம் என்பது இழக்காகும்

நீ குளித்தால் கங்கை அழுக்காகும்

(ஒரு பண்பாடு..)



மயக்கம் என்பது மாத்திரையா

மரணம் போகும் யாத்திரையா

விளக்கு இருந்தும் இருட்டரையா

விடிந்த பின்னும் இருட்டறையா

வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து

வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து

இந்த உலகம் உன்னை அழைக்கிறது

அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது

(ஒரு பண்பாடு..)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:20 pm)
பார்வை : 0


மேலே