தேவதை!

அந்தி சாய்ந்த வேளையில்
அவளுக்காக காத்திருந்தேன்!

வானில்
இரவின் குளத்தில்
அத்தனையும் வெள்ளை மீன்கள்!

அட!
தூரத்தில் அவளும்
வெள்ளை நிற ஆடையில்!

பசித்து அழும்
அமாவாசை குழந்தைக்கு
தினம் ஒன்றாய்
கீறி கொடுத்ததில்
தவறி விழுந்துவிட்ட
நிலா பழத்துண்டு போல்
வந்து கொண்டிருந்தாள்,

எனக்கே எனக்கான
என் தேவதை!!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 4:36 pm)
பார்வை : 0


மேலே