குயிலின்மொழி குழலின்மொழி

குயிலின்மொழி குழலின்மொழி
குழந்தைமொழி கட்டில்
துயிலும்பொழு திசைக்கும் இளந்
தோகைமொழி கேட்டுப்
பயிலும் ஒரு கிளியின் மொழி
பண்யாழ்மொழி எல்லாம்
உயிரில்எம துளத்தில் உரம்
ஊட்டும்தமி ழாமோ?


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:27 pm)
பார்வை : 91


மேலே