அகலாதே அகலாதே சேட்டை

அகலாதே அகலாதே!
அழகே நீ அகலாதே!

என் கண்ணை விட்டு
பெண்ணே அகலாதே!
நீ இல்லை என்றால்
வாழ்வே நிகழாதே!

அகலாதே அகலாதே!
அழகே நீ அகலாதே

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உனை உனை மோதும் இப்போது!
சுடச்சுட முத்தம் என்று
கிசுகிசுச் செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது?

ஏராளமாக காதல்
தாராளமாக நானும்
வேறென்ன கேட்கிறாய்?

நாவில் வீழும் தேனை
நீ தின்னத்தானே திணறுகிறாய்

ஹே அதிரடிப் பூவே!
நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை!
தத்தளிக்கிறேன்
தீத்தெளிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை!

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உனை உனை மோதும் இப்போது!
சுடச்சுட முத்தம் என்று
கிசுகிசுச் செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது?

காற்றிலே ஒரு பஞ்சைப் போலே
காதலில் என் நெஞ்சம் வீழ
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:05 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே