அபேதாநந்தா ஸ்வாமிகள்

சுருதியும் அரிய உபநிட தத்தின்
தொகுதியும் பழுதற உணர்ந்தோன்
கருதிடற் கரிய பிரம நன்னிலையைக்
கண்டுபே ரொளியிடைக் களித்தோன்
அரிதினிற் காணு மியல்பொடு புவியி
ன்ப்புறத் திருந்து நண்பகலில்
பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில்
மெய்யொளி பரப்பிடச் சென்றோன்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:21 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே