தாயுமானவர்

என்றும் இருக்க உளங் கொண்டாய்
இன்பத் தமிழுக் கிலக்கிய மாய்
இன்றும் இருத்தல் செய்கின் றாய்
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ
ஒன்று பொருளஃ தின்ப மென
உணர்ந்தாய் தாயு மானவனே
நின்ற பரத்து மாத்திரமோ
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:19 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே