அபேதாநந்தா ஸ்வாமிகள்

சுருதியும் அரிய உபநிட தத்தின்
தொகுதியும் பழுதற உணர்ந்தோன்
கருதிடற் கரிய பிரம நன்னிலையைக்
கண்டுபே ரொளியிடைக் களித்தோன்
அரிதினிற் காணு மியல்பொடு புவியி
ன்ப்புறத் திருந்து நண்பகலில்
பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில்
மெய்யொளி பரப்பிடச் சென்றோன். 1

பு{[குறிப்பு]: அமெரிக்கா கண்டம்; நமது கண்டத்தில் பகலாயிருக்கும்போது அங்கே இருளாக
இருக்குந்தன்மை யுடையது.}

வேறு

ஒன்றேமெய்ப் பொருளாகும் உயிர்களெலாம்
அதன் வடிவாம் ஓருங்காலை,
என்தேவன் உன்தேவன் உன்றுலகர்
பகைப்பதெலாம் இழிவாம் என்று
நன்றேயிங் கறிவறுத்தும் பரமகுரு
ஞானமெனும் பயிரை நச்சித்
தின்றேபா ழாக்கிடுமைம் புலன்களெனும்
விலங்கினத்தைச் செகுத்த வீரன். 2

வேறு

வானந் தம்புகழ் மேவி விளங்கிய
மாசி லாதி குரவனச் சங்கரன்
ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்
நண்ணி னானெனத் தேசுறு மவ்வியே
கானந் தப்பெருஞ் சோதி மறைந்தபின்
அவனி ழைத்த பெருந் தொழி லாற்றியே
ஊனந் தங்கிய மானிடர் தீதெலாம்
ஒழிக்குமாறு பிறந்த பெருந்தவன். 3

வேறு

தூயாஅபே தாநந்த னெனும் பெயர்கொண்
டொளிர் தருமிச் சுத்த ஞானி
நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்
சாத்தியருதிள் நெஞ்சிற் கொண்டு்
மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்
னெறிசாரும் வண்ணம் ஞானம்
தோயநனி பொழிந்திடுமோர் முகில்போன்றான்
இவன்பதங்கள் துதிக்கின் றோமே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:22 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே